Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அண்மைக் காலமாக வடகொரியா தொடர்ந்து அணுவாயுத மற்றும் ஏவுகணைப் பரிசோதனைகளை செய்து வருவதால் அமெரிக்கா, தென்கொரியா மற்றும் வடகொரியா இடையே அதிகரித்துள்ள போர்ப் பதற்ற நிலையைத் தவிர்க்க பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முன்வருமாறு சர்வதேசத்துக்கு பாப்பரசர் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

இப்போர்ப் பதற்ற நிலை இப்படியே நீடித்தால் மனித இனத்துக்குப் பேரழிவை ஏற்படுத்தக் கூடிய ஒரு பெரும் போராக மாறும் சூழல் இருப்பதை சுட்டிக் காட்டிய போப் பிரான்சிஸ் சர்வதேச விவகாரங்களில் எப்போதும் உதவத் தயாராக இருக்கும் நோர்வே போன்ற நாடுகளுக்கு இணையாக ஏனைய நாடுகளும் இதில் தலையிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். வெகு சமீபத்தில் வடகொரியா மேற்கொண்ட ஏவுகணைப் பரிசோதனை தோல்வியில் முடிந்ததும் குறிப்பிடத்தக்கது. எகிப்து பயணத்தை முடித்து விட்டுத் திரும்பிய போப் பிரான்சிஸ் தனது விமானத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கும் போதே இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

அணுவாயுதப் போர் மூண்டால் பேரழிவு ஏற்படும் என்ற காரணத்தினால் தான் தான் வடகொரிய விவகாரத்தில் 3 ஆம் தரப்பு தலையிட வேண்டும் என்று கோரியிருப்பதாக போப் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கா உலகளாவிய இராஜ தந்திர ரீதியிலான வலிமையை இழந்துள்ளதாகவும் அதனை மீளப் பெறுவது அவசியம் என்றும் தெரிவித்த போப் பிரான்சிஸ் இது தொடர்பில் தான் விரைவில் ஐரோப்பாவில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்கத் தயார் என்றும் ஆனால் இதற்கு வாஷிங்டன் இணக்கம் தெரிவித்துள்ளதா எனத் தெரியவில்லை என்றும் கூடத் தெரிவித்துள்ளார்.

0 Responses to வடகொரியா விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண சர்வதேசத்துக்கு போப் பிரான்சிஸ் அழைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com