Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதியளித்தபடி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் உயரதிகாரிகளுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “தேர்தல் பிரச்சாரங்களின்போது நான் அளித்த வாக்குறுதிகளில் மாற்றம் ஏதும் இல்லை. அவை அனைத்தும் கூறியபடியே நிறைவேற்றப்படும்,

எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அரச நிறுவனங்கள் சிலவற்றின் தலைமைப் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளது. குறிப்பிட்ட சில நிறுவனங்களை மேலும் திறமையாகச் செயற்பட வைக்கும் நோக்கிலேயே இந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to வாக்குறுதியளித்தபடி நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கத் தயார்: மைத்திரி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com