Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினர் மற்றும் பொலிஸார் வசமுள்ள எமது மக்களின் காணி, நிலங்கள், கட்டடங்கள் என்பவற்றை விடுவித்தல் தொடர்பில் தாங்கள் தலையிட்டு விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

அதில், “தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதங்களை மேற்கொள்கின்ற நிலையில்தான் அவர்களது விடுதலையைப் பற்றி பேசப்படுகின்ற ஒரு சூழ்நிலை தொடர்ந்து காணப்படுகிறது. எனினும், எம்மால் அவ்வாறு பார்க்க முடியாது. இது தொடர்பில் மனிதாபிமான அடிப்படையில் உரிய நடவடிக்கையை தாங்கள் எடுக்க வேண்டும்.

அத்துடன், படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு குறித்தும் உரிய நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதே நேரம், மேற்படி இரு விடயங்கள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், கூறியதாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் முரண்நிலை கொண்டவையாக உள்ளன. அரசியல் கைதிகள் மற்றும் காணிகள் விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி உத்தரவிட்டு ஒரு வருடமாகியும் இன்னும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என தாங்கள் (ஜனாதிபதி) சம்பந்தனிடம் கூறியதாகவும், இதனை சம்பந்தனே தெரிவித்ததாகவும் ஒரு செய்தி கடந்த 17ஆம் திகதி ஊடகங்களில் வெளிவந்திருந்தது.

எனினும், ஜனாதிபதி உத்தரவிட்டால் காணிகள் விடுவிக்கப்டும் என பாதுகாப்புத் தரப்பினர் கூறியதாக, சம்பந்தன் கூறியதாக ஒரு செய்தி கடந்த 18ஆம் திகதி ஊடகங்களில் வெளிவந்துள்ளது. இந்த இரண்டு செய்திகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் முரண்நிலைகளைக் கொண்டதாகவே இருப்பதால் எமது மக்களுக்கு இது தொடர்பில் தாங்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

மேற்படி செய்திகளில் எது உண்மை, எதை எமது மக்கள் நம்புவது என்பதில் குழப்ப நிலையே காணப்படுகின்றது. எனவே, இந்த விடயத்தில் தம்மையும் குழப்பி, மக்களையும் குழப்புகின்ற நிலை ஏற்படக்கூடாது. இவை, எமது மக்களின் உணர்வுகளோடும், உயிர் வாழக்கூடிய வாழ்வாதாரங்களோடும் பின்னிப் பிணைந்துள்ள பிரச்சினைகள்.”என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்துக; மைத்திரிக்கு டக்ளஸ் கடிதம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com