தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கேள்வி:- அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணையும் சூழல் ஏற்பட்டு உள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பில் வைக்கப்படும் நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படுமா?
பதில்:- முதலில் பேச்சுவார்த்தை நடக்கட்டும். இனிமேல் யாரும் ஏமாறவும் முடியாது. ஏமாற்றவும் முடியாது. இன்னும் 4 ஆண்டு காலம் நல்லபடியாக ஆட்சியை நடத்த வேண்டும் என்பதே எங்களின் எண்ணம்.
கேள்வி:- இரு அணிகளும் இணைந்தால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரில் யாரை முதல்-அமைச்சராக ஏற்று செயல்படுவீர்கள்?
பதில்:- தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் நான் வனத்துறை அமைச்சராக உள்ளேன். இதற்குள்ளேயே உங்கள் கேள்விக்கான பதிலும் இருக்கிறது.
கேள்வி:- ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நேற்று அளித்த பேட்டியில், இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்தும் முன்பு சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும். அவர்கள் நீக்கப்பட்டது தொடர்பான அறிக்கையை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து உள்ளார். அதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்:- இந்த பேட்டி குறித்த தகவல் எதுவும் எனக்கு இதுவரை தெரியாது. அதுபற்றி தெரியாமல் கருத்து சொல்ல முடியாது.
கேள்வி:- சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைத்துள்ளது எங்களது தர்ம யுத்தத்துக்கு கிடைத்த முதல் வெற்றி என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ஆனால், அனைத்து அமைச்சர்களின் முயற்சியாலேயே அவர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளாரே?
பதில்:- மற்ற அமைச்சர்களின் பேச்சுகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை.
கேள்வி:- அமைச்சர்களிடம் ஏதோ பயம் உள்ளதாகவும், அந்த பயத்தால் இந்த முடிவு எடுத்து உள்ளதாகவும் டி.டி.வி.தினகரன் கூறி உள்ளார். அமைச்சர்களிடம் என்ன பயம் இருக்கிறது?
பதில்:- அது அவருடைய (டி.டி.வி.தினகரன்) கருத்து.
கேள்வி:- தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன் மீது டெல்லியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்:- இதற்கு அவரே (டி.டி.வி.தினகரன்) பதில் கூறி இருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட விசயத்தை அவரிடம் தான் கேட்க வேண்டும். சட்டம் தன் கடமையை செய்யும்.
கேள்வி:- மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் என்று கூறப்படும் ஓ.பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சராக நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?
பதில்:- கற்பனையான கேள்விகளுக்கு கற்பனையாக பதில் சொல்ல முடியாது. பேச்சுவார்த்தை நடக்கட்டும். பிறகு பார்த்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

0 Responses to ஓ.பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சராக ஏற்று கொள்வது தொடர்பில் இப்பொது சொல்ல முடியாது - திண்டுக்கல் சீனிவாசன்