முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18ஆம் திகதி, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வறுமை ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே அவர் முல்லைத்தீவு வரவுள்ளதாக கூறப்படுகின்றது.
அரசாங்கம் இந்த ஆண்டினை தேசிய வறுமை ஒழிப்பு ஆண்டாக பிரகடனப்படுத்தியுள்ளது. இது தொடர்பிலான கலந்துரையாடல், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாட்டில் மிகவும் வறுமையான மாவட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிக்கலாம் என்பது தொடர்பில் பேசப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டு ஆரம்பித்து வைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்பத் திகதி, மே 18 ஆம் திகதி என்று பின்னர்தான் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த உயர்மட்ட தமிழ் அரச அதிகாரிகள் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இறுதிக்கட்டப் போரில் கொத்தாகத் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்ட மண்ணில், முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நடைபெறும் நாளில், ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளது தொடர்பில் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

0 Responses to முள்ளிவாய்க்கால் நினைவேந்தால் நாளான மே 18, ஜனாதிபதி முல்லைத்தீவுக்கு விஜயம்?