Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வடக்கு மாகாணத்திற்கான மூன்று நாள் பயணத்தை எதிர்வரும் 19ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளார். இதன்போது, பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துரையாடல்களிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் 19ஆம் திகதி மன்னார் மாவட்டத்திற்கு வருகை தரும் பிரதமர், அங்கு பல்வேறு தரப்புக்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வரும் ரணில் விக்ரமசிங்க, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் முக்கிய கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார். அரச அதிகாரிகளுடன் தனியானதொரு கலந்துரையாடல், அரசியல் தரப்பினருடன் தனியானதொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

0 Responses to ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 19ஆம் திகதி வடக்கு விஜயம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com