இந்திய மீன்பிடிப் படகொன்றில் சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த மியான்மார் பிரஜைகள் 30 பேரையும், இந்தியப் பிரஜைகள் இருவரையும் கைது செய்துள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் பயணித்த படகை, இந்தியப் பிரஜைகள் இருவரே செலுத்தி வந்துள்ளமை, விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த படகு, முற்பகல் 10.00 மணிக்கு, காங்கேசன்துறை கடற்பரப்பில் இருந்து 12 கடல் மைல் தூரத்தில் வைத்துக் கைப்பற்றப்பட்டதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் சமிந்த வலாகுகே தெரிவித்துள்ளார்.
கடற்படையினர் இந்தப் படகை நிறுத்தி விசாரணை செய்தபோது, இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். குறித்த படகில் இருந்து கைது செய்யப்பட்டவர்களில் 7 ஆண்கள், 7 சிறுவர்கள், 7 பெண்கள், 7 சிறுமிகள் இருப்பதாக கடற்படையினர் தெரிவித்தனர். அத்தோடு, பிறந்து 5 தினங்கள் மற்றும் 4 மாதங்கள் ஆன குழந்தைகள் இரண்டும் உள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளார். அவர்களில் 30 மியன்மார் பிரஜைகளும் அகதிக் கோரிக்கையாளர்கள் என்று கூறப்படுகின்றது.

0 Responses to சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் 32 பேர் காங்கேசன்துறைக் கடலில் கடற்படையினரால் கைது!