Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்திய ராணுவ வீரர்கள் உடலை சிதைத்த பாகிஸ்தான் ராணுவத்திற்கு பதிலடி
கொடுப்பதற்கு இந்திய ராணுவத்திற்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரில், பாக்., ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில்,
ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையை சேர்ந்த இருவர் பலியாகினர். இந்த
வீரர்களின் உடல்களை, பாக்., ராணுவத்தினர் சிதைத்து, தலையை துண்டித்ததால்,
எல்லையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. பாகிஸ்தான் ராணுவ தளபதி பாஜ்வா
வந்து சென்ற 24 மணி நேரத்திற்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது.இந்நிலையில்,
இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு அதிகாரம்
அளிக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய ராணுவமும், இந்திய ராணுவ வீரர்கள் உடல் சிதைக்கப்பட்ட
சம்பவத்திற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும். எல்லையில் பல இடங்களில்
பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்கதல் நடத்தும் நிலையில், பாகிஸ்தான்
ராணுவம் திட்டமிட்டு இந்த சதிச்செயலை அரங்கேற்றியுள்ளது எனக்கூறியுள்ளது.
ராணுவ தளபதி பிபின் ராவத்தும் தற்போதும் காஷ்மீரில் உள்ளார்.

இதனிடையே, இந்திய ராணுவ வீரர்கள் உடலை நாங்கள் சிதைக்கவில்லை என
பாகிஸ்தான் ராணுவம் மறுத்துள்ளது.

0 Responses to பாகிஸ்தானுக்கு பதிலடி: இந்திய ராணுவத்திற்கு முழு அதிகாரம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com