Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கோவையில் ஆடம்பர நகைகளை சிலர் விற்றுள்ளனர்; அவை, கோடநாடு எஸ்டேட்டில்
திருடியதா என, சந்தேகம் எழுந்துள்ளதால், உளவுப்பிரிவு போலீசார்
விசாரிக்கின்றனர்.
சேலம், ஆத்துார், கோவை, சென்னை உட்பட சில பகுதிகளில் உள்ள நகைக்கடை, நகை
அடகு கடை மற்றும் நகை அடமானம் பெறும் தனியார் நிதி நிறுவனங்களில்,
பணக்கார குடும்பத்தினர் பயன்படுத்தும் ஆடம்பர நகைகளை, ஜனவரி,
பிப்ரவரியில், குறைந்த விலைக்கு சிலர் விற்றுள்ளதாக
கூறப்படுகிறது.அவற்றை, சம்பந்தப்பட்ட நகைக்கடை உரிமையாளர்கள்,
உறவினர்கள், நெருக்கமான வாடிக்கையாளர்களுக்கு விற்றதாக கூறப்படுகிறது.

ஆத்துார் நகரில் உள்ள நகை மற்றும் அடகு கடைகள், சேலத்தில் உள்ள சில
கடைகளில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.'விற்பனைக்கு
முந்தைய இருப்பு, விற்ற தங்க அளவில் இருந்த வித்தியாசத்தால், சோதனை
நடந்தது' என, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர்.ஜெயலலிதா மறைவுக்கு
பின், சேலம் மாவட்டத்தில், பழைய நகைகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தது,
பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா, நகை அணியாமல் இருந்தாலும், நகை பிரியர் என்றும், கோடநாடு
எஸ்டேட்டுக்கு வரும் போது, புது நகைகளை அணிந்து பார்ப்பார் எனவும்
கூறப்படுகிறது.அதனால், அதிக அளவிலான நகைகள், அங்கிருந்ததாக
கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின், எஸ்டேட்டில் போலீசார்
பாதுகாப்பு இல்லாததால், வடமாநிலங்களை சேர்ந்தவர்கள், பாதுகாப்பு பணியில்
இருந்துள்ளனர்.

இதனால், அங்கு ஏற்கனவே பணிபுரிந்த சிலர், அவ்வப்போது நகை, பணத்தை கொள்ளை
அடித்ததாக தெரிகிறது. 3,000 சவரன் கொள்ளை அடிக்கப்பட்டதாகவும், அவற்றை
சிலர், நகை கடைகளில் விற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.எஸ்டேட்டில்,
ஜெயலலிதா, சசிகலா அறையில் இருந்த ஏராளமான நகைகள் திருட்டு போனதாக தகவல்
வெளியானதால், சேலம், கோவை, சென்னை ஆகிய பகுதிகளில், உளவுப்பிரிவு
போலீசார், ரகசிய விசாரணை நடத்துகின்றனர்.காவலாளி கொலை வழக்கை,
சி.பி.ஐ.,க்கு மாற்றினால், ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகை திருட்டு புகார்
குறித்த தகவல் வெளியாகும். மேலும், கோடநாடு எஸ்டேட் விவகாரம் தொடர்பான
மர்ம முடிச்சுகள் அவிழும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

0 Responses to ஆடம்பர நகைகள் விற்பனை: கோடநாடு எஸ்டேட்டில் திருடியதா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com