எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோடு இணைந்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும், கூட்டு எதிரணியும் (மஹிந்த அணி) போட்டியிடாது என்று பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடலில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற கூட்டு எதிரணியின் மே தினக் கூட்டத்தில் இந்த விடயம் தெளிவாக தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளையே தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பின்பற்றி வருகின்றது. அரசாங்கம் அநேக அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தி நாட்டுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது. இவ்வாறான நிலையில், சுதந்திரக் கட்சியின் கீழ் நாங்கள் (ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் கூட்டு எதிரணி) போட்டியிட மாட்டோம். கை சின்னத்தில் மக்களிடம் வர மாட்டோம்.” என்றுள்ளார்.

0 Responses to சுதந்திரக் கட்சியோடு மஹிந்த அணி இணையாது: ஜீ.எல்.பீரிஸ்