மகிந்த ராஜபக்சவை தோற்கடிக்க சர்வதேச ரீதியான சக்திகள் செயற்பட்டதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.பீ. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அரசாங்கம் அமெரிக்க வரவு செலவுத் திட்டத்தில் 454 மில்லியன் டொலர்களை ஒதுக்கியதாகவும் அதனை டொனால்ட் ட்ரம்ப் தற்போது வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
மகிந்த ராஜபக்சவை தோற்கடிக்க தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் சக்திகள் உருவாகி இருந்தன. இதன் பிரதிபலனாக தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
எனினும் தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் சம்பந்தமாக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் உருவாகியுள்ளன.
இதனை பறைசாற்றும் வகையில் மகிந்த ராஜபக்சவுடன் மே தினத்தில் சகல மக்களும் கைகோர்த்துக் கொண்டனர். இதனால், மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை நீக்கி அரசாங்கம் தனது கொள்கையை காட்டியுள்ளது.
சுமந்திரன் போன்றவர்களுக்கும் கடந்த காலத்தில் பாதுகாப்பு வழங்கப்பட்டது. எனினும் நாட்டை காப்பாற்றிய தலைவரின் பாதுகாப்பு கடும் ஆபத்திற்குள் சென்றுள்ளது.
இதற்கு எதிராக சகல மதத் தலைவர்களும் அணி திரள வேண்டும் எனவும் சீ.பீ. ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to மகிந்தவை தோற்கடிக்க ஒபாமா அரசாங்கம் நிதி வழங்கியது! ட்ரம்ப் வெளிப்படுத்திய உண்மை