கடந்த காலத்தில் கடத்தல், கொலை, கப்பம் கோரல் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் ஈடுபட்டவர்கள் எந்த அடையாளத்துடன் இருந்தாலும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படாது என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இராணுவத்தில் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட சில கறுப்பு ஆடுகள் இருக்கலாம். அவ்வாறானவர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட்டாலே இராணுவத்தின் கௌரவத்தை பாதுகாக்க முடியும் என்றும் நேற்றைய (செவ்வாய்க்கிழமை) பாராளுமன்ற அமர்வில் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மங்கள சமரவீர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஐக்கிய நாடுகளோடு எந்தவொரு ஒப்பந்தத்திலும் நாம் கைச்சாத்திடவில்லை. நாட்டிலுள்ள சக பிரஜைகளின் நன்மை கருதி சில விடயங்களை நிறைவேற்றுவதற்கு இணக்கம் காணப்பட்டது. இதனாலேயே அரசாங்கம் அப்பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியது.
இலங்கை இணை அணுசரனை வழங்கிய குறித்த பிரேரணையில் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அறிக்கையின் பரிந்துரைகள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. எனவே எதிரணியில் உள்ளவர்கள் பொய் கூறி மக்களை திசைதிருப்புவதை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
இணை அணுசரனை வழங்கிய இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு 48 நாடுகள் ஆதவளிக்க முன்வந்திருந்தன. இந்த நகர்வில் இலங்கையை பல்வேறு நாடுகளும் பாராட்டியுள்ளன.
ஆனால், முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவும் அவரை சுற்றியுள்ள அவரது ஆலோசகர்களும் தான் தற்போது பதற்றமடைந்துள்ளனர். நாட்டின் இறையாண்மை பற்றி இவர்கள் பேசுகின்றனர். ஆனால், அன்று ஐக்கிய நாடுகள் விசாரணைக்கு இடமளித்து இவர்கள் தான் நாட்டின் இறையாண்மையை விட்டுக்கொடுத்தனர். எனினும், அதிகாரத்தை இழந்தவர்கள் இனங்கள் மத்தியில் மீண்டும் இனவாதத்தை தூண்டிவிட முயற்சிக்கின்றனர்.
அரசாங்கம் என்ற வகையில், பாதுகாப்பு படையினர் மற்றும் மக்கள் தொடர்பான பொறுப்பு எமக்கு இருக்கிறது. நாம் அந்த பொறுப்பை ஏற்று செயற்படுவோம். இராணுவம் இதில் எந்தவொரு நடவடிக்கைக்கும் அச்சப்பட தேவையில்லை. இந்த செயற்பாட்டின் மூலமே எமது இராணுவத்தின் நற்பெயரை பாதுகாக்க முடியும்.
எம்மிடம் சிறந்த இராணுவமொன்று இருக்கிறது என்பதை சகலரும் நன்கறிவர். ஆகையால் தான் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையில் அங்கம் வகிக்க எமது இராணுவத்தினருக்கு இடம் கிடைக்கிறது. எனினும், எந்தவொரு சிறந்த இராணுவத்திலும் கறுப்பு ஆடுகள் இருக்கலாம். அவ்வாறானவர்களை தண்டிக்கும் போது தான் இராணுவத்தின் நற்பெயரை பாதுகாக்க முடியும். கிரிஷாந்தி கொலை சம்பவத்தின் போது உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட படை வீரருக்கு தண்டனை வழங்கப்பட்ட போது தான் முழு இராணுவத்தின் நற்பெயரும் பாதுகாக்கப்பட்டது.” என்றுள்ளார்.

0 Responses to குற்றமிழைத்த இராணுவத்தினரைத் தண்டித்தாலே இராணுத்தின் கௌரவத்தை காப்பாற்ற முடியும்: மங்கள சமரவீர