தமிழீழ மாவீரர் தினமான இன்று வடக்கு-கிழக்கு தமிழர் தாயகமெங்கும் கனத்த மௌனம் தற்போது நீடிக்கின்றது.படைதரப்பின் உச்ச கெடுபிடிளை தாண்டி பரவலாக மாவீரர் தினத்தை நினைவு கூரும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது.இரவோடிரவாக இவை ஒட்டப்பட்டிருக்கலாமென நம்பப்படுகின்றது. குறிப்பாக வல்வெட்டித்துறை பகுதியினில் தலைவர் பிரபாகரனது 59 வது பிறந்த தினமான நேற்று அங்குள்ள ஆலயங்களினல் நடைபெற்ற விசேட பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகள் தொடர்பினில் ஆலய நிர்வாகங்கள் விசாரணைக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் நாள் அனுஸ்டிப்பு நடந்துவிடக்கூடாது என்ற காரணத்தினால் பல்கலைக்கழக சூழல் மற்றும் நகர் உள்ளிட்ட பகுதிகள் எங்கும் இராணுவம், பொலிஸ் மற்றும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி கடந்த சில தினங்களாக இவற்றைக் குழப்பும் முயற்சியில் பல செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. கைது செய்தல்கள் விசாரணைகள் , தாக்குதல்கள் என்பன அதிகரித்துள்ளது. அதன்படி மாவீரர் துயிலும் இல்லங்களை மீளமைக்க நடவடிக்கை எடுக்க சபையில் பிரேணையினைக் கொண்டு வந்த சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் அச்சுறுத்தும் வகையில் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்;று விடுதலை செய்யப்படடிருந்தார். அத்துடன்; கரவெட்டிப்பிரதேச சபையில் மாவீரர்தினம் அனுஸ்டிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானதையடுத்து தவிசாளர் மற்றும் உறுப்பினர்களது வீடுகளும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று முன் தினமிரவு தெல்லிப்பழை பிரதேசத்தில் நான்கு இளைஞர்களை இராணுவத்தினர் தாக்கியதுடன் அவர்கள் மீது ஜனாதிபதியின் பதாகைகளை கிழித்தனர் என்று குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
எனினும் நேற்றைய தினம் அவர்கள் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரது விசாரணைக்காக வவுனியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மேலும் நேற்;றைய தினம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரால் யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளதுடன் சில ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களும் சுற்றிவளைக்கப்பட்டதுடன் அவர்களுக்கு அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, துண்டுப்பிரசுரங்கள் விநியோகமும் யாழ்ப்பாணத்தில் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. அதன்படி அண்மையில் பல்கலை வளாகத்தில் துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டதுடன் யாழ்.நகரப்பகுதியில் சிலரினால் விநியோகிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இன்றைய தினம் துண்டுப்பிரசுரங்கள் வீதிகளில் ஒட்டப்பட்டும் பாடசாலைகளுக்கு தபால் மூலம் அனுப்பியும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வீதிகளில் இராணுவமும் பொலிஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டு சோதனைகளும் ரோந்து நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புலனாய்வாளர்களது கண்காணிப்பும் அதிகமாக காணப்பட்டுள்ளது. அதிலும் அரச திணைக்களங்களினில் காலை முதல் படையினர் கண்காணிப்பு பணிகளினில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். இதேவேளை முல்லைத்தீவு, கிளிநொச்சி , மன்னார் போன்ற இடங்களிலும் இவ்வாறான பதட்ட நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கிழக்கு மாகாணத்திலும் துண்டுப்பிரசுர விநியோகம் , தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் இராணுவம் பொலிஸ் குவிப்பு , சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் மக்கள் பயப்பீதியில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 Responses to தமிழர் தாயகத்தில் கனத்த அமைதி! மக்கள் மனங்களெங்கும் மாவீரர்கள்!