வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் இன்று புதன்கிழமை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, விசாரணை அறிக்கை மீதான வடக்கு மாகாண சபையின் விசேட அமர்வு எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறும் என்று அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
“விசாரணை அறிக்கை மீதான சபை அமர்வில் இருந்து ஊடகங்களை வெளியேற்ற வேண்டும். எமது விடயங்களை, நாங்கள் பேசிக் கொள்ளலாம். இதனால் சபையில் ஊடகங்கள் இருக்க வேண்டியதில்லை.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார்.
எனினும், இதற்கு வடக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா, ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டனர். ஊடகங்களை வெளியேற்றி விட்டு சபையை நடத்தினால் மக்களுக்கு சந்தேகம் அதிகமாகும் என்று அவர்கள் வாதிட்டுள்ளனர்.

0 Responses to விசாரணை அறிக்கை மீதான வடக்கு மாகாண சபையின் விசேட அமர்வு எதிர்வரும் 14ஆம் திகதி!