கடந்த 4 நாட்களுக்கும் மேலாக சீனாவின் ஜிலின் நகரத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப் பட்டுள்ளது.
மேலும் இந்த அனர்த்தத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஒரு இலட்சம் பேர் வீடுகளை இழந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதைவிட பலர் காணாமற் போயிருப்பதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. பல பாலங்களும் மின் கம்பங்களும் இடிந்து விழுந்துள்ளதுடன் பல நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மின்சாரம் முற்றாகத் துண்டிக்கப் பட்டுள்ளது. தற்போது மீட்புப் பணிகளில் சுமார் 32 360 மீட்புப் படையினர் ஈடுபட்டு வருவதாக ஜுலின் நகர அனர்த்த முகாமை அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சீனாவின் ஜியாங்சு மாநிலத்திலுள்ள சாங்சூ நகரில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 22 பேர் பலியானதாகவும் 3 பேர் கடுமையான தீக் காயங்களுக்கு உள்ளானதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்துக்கான காரணம் குறித்து அறிய விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

0 Responses to சீனாவின் ஜிலின் நகரத்தில் கனமழையால் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிப்பு, 18 பேர் பலி