3 வருடங்களுக்கு முன்னர் ரஷ்ய பிரிவினைவாதிகளால் கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட MH 17 விமானத்தில் பயணித்து தமது உயிரை இழந்த சுமார் 298 பயணிகளை அவர்களது உறவினர்களும் மலேசிய அரசும் இன்று திங்கட்கிழமை நினைவு கூறுகின்றனர்.
2014 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் திகதி அம்ஸ்டெர்டாமில் இருந்து கோலாலம்பூர் வரும் வழியில் தான் MH 17 விமானம் கிழக்கு உக்ரைன் வான் பரப்பில் பறந்த போது சுட்டு வீழ்த்தப் பட்டது. இந்த சம்பவத்தில் இவ்விமானத்தில் பயணித்த 283 பயணிகளும் 15 விமான சேவையாளர்களும் தமது உயிரை இழந்தனர். இதில் 80 பேர் சிறுவர்கள் ஆவர். தரையில் இருந்து வானில் சென்று தாக்கக் கூடிய ஏவுகணை மூலம் ரஷ்ய பிரிவினை வாதிகள் இவ்விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவே கருதப் படுகின்றது. வரலாற்றில் மிக மோசமான விமானத் தாக்குதல் சம்பவமாகவும் இது பதியப் பட்டுள்ளது.
குறித்த விமானம் சுட்டு வீழ்த்தப் பட முன்னர் கிழக்கு உக்ரைனின் சர்ச்சைக்குரிய வான் பரப்பில் பறக்க வேண்டாம் என ரேடார் மூலம் கண்காணிக்கப் பட்டு விமானக் கட்டுப்பாட்டு மையம் விமானிக்கு அறிவுறுத்தியதாகவும் ஆனால் தவிர்க்க இயலாத காரணத்தால் விமானியால் அந்த அறிவுறுத்தலை உடனே செயற்படுத்த முடியாத நிலையில் மயிரிழையில் விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டுள்ளதாகத் தற்போது வெளியாகி உள்ள செய்திகள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் இது ஒரு விபத்தாகக் கருதப் பட்டாலும் சுமார் 15 மாதங்களாக DSB என்ற டச் விமான சேவை பாதுகாப்பு அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் விமானம் தாக்கப் பட்டதை உறுதி செய்தது.
இன்றைய சூழ்நிலையில் கிழக்கு உக்ரைனின் கிரிமியா அடங்கிய வான் பரப்பு வர்த்தக நோக்கிலான மற்றும் பயணிகள் விமான சேவைகளுக்கு மிக ஆபத்தானதாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

0 Responses to கிழக்கு உக்ரைனில் மலேசிய MH 17 விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டதன் 3 ஆம் ஆண்டு நினைவு தினம்