இன்று வியாழக்கிழமை மதியம் 6.5 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று மத்திய பிலிப்பைன்ஸைத் தாக்கிய போதும் பாரிய உயிரிழப்புக்களோ பொருட் சேதமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
மத்திய பிலிப்பைன்ஸில் உள்ள தீவான லைய்ட்டே இன் அருகே 6 Km ஆழத்தில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான USGS தெரிவித்துள்ளது. மேலும் மிக வலுவானதாக இந்த நிலநடுக்கம் இருந்த போதும் இது சுனாமி அலைகளை ஏற்படுத்தவில்லை.
மேலும் இந்த நில நடுக்கத்தின் அதிர்வுகள் சாலைகளிலும் கட்டடங்களிலும் பலமாக உணரப் பட்டதால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர். பசுபிக் சமுத்திரத்தில் ரிங் ஆஃப் ஃபைர் எனப்படும் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்துள்ள நாடான பிலிப்பைன்ஸில் அதிகளவு நில அதிர்வுகளும் எரிமலை செயற்பாடுகளும் ஏற்படுவது வழக்கமாகும்.
1990 ஆம் ஆண்டு வடக்கு பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவுடைய நிலநடுக்கத்தில் 2000 பொது மக்கள் வரை பலியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to மத்திய பிலிப்பைன்ஸைத் தாக்கிய வலுவான நிலநடுக்கம்