எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு, சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை இழந்துள்ளது. இதனால், நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வின் தினகரன் அணி சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர், எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கான ஆதரவை இன்று செவ்வாய்க்கிழமை காலை விலக்கிக் கொண்டது முதல், சட்ட மன்றத்துக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 117 உறுப்பினர்கள் என்கிற நிலையிலிருந்து, எடப்பாடி அரசு 116 உறுப்பினர்கள் என்கிற நிலைக்கு மாறியுள்ளது. இதனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றுப் போகும் நிலையை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டுள்ளது.
தி.மு.க.வும், தினகரன் ஆதரவு சட்ட மன்ற உறுப்பினர்களும் எடப்பாடி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழக ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழந்தது? நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்புமா?!