Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியுள்ளது.

முன்னாள் ஆட்சியாளர்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் மென்தன்மையைப் பேணினார் என்ற குற்றச்சாட்டு, விஜயதாச ராஜபக்ஷ மீது முன்வைக்கப்பட்டிருந்தது.

இருந்த போதிலும் சுதந்திரமான நீதித்துறையில் தான் தலையிடுவதில்லையென விஜயதாச ராஜபக்ஷ கூறிவந்திருந்தார்.

இந்நிலையிலேயே கடந்த 17ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மேலெழுந்திருந்தன. அவரது குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் அவகாசம் நேற்று திங்கட்கிழமை வரை வழங்கப்பட்ட போதிலும் அவர் பதிலளிக்கத் தவறியிருந்தார்.

பாராளுமன்ற குழுக்களின் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க கேள்வி எழுப்பியதாகவும் அறிய முடிகிறது. இவ்விடயங்களை கருத்திற்கொண்டே விஜயதாச ராஜபக்ஷ, தன்னுடைய பதவியிலிருந்து விலக வேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்தது.

அதனைத் தொடர்ந்து அத்தீர்மானத்தினை ஜனாதிபதிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். எப்படியிருந்த போதிலும் அமைச்சுப் பதவியை நீக்குவது தொடர்பிலான இறுதி முடிவை ஜனாதிபதியே எடுப்பார்.

1 Response to விஜயதாச ராஜபக்ஷவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க ஐ.தே.க பரிந்துரை!

  1. Melon Says:
  2. Find out more about monthly mortgage repayments, whether you must rent or buy, and what you'll be able to afford with Mortgage Architect's Canadian mortgage calculator. mortgage calculator canada If you raise your regular payment, you'll pay less interest and be mortgage-free faster. canada mortgage calculator

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com