177க்கும் அதிகமான பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரியைக் குறைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அசாம் தலைநகர் கவுகாத்தியில் 23வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடந்தது. இதில் மாநில நிதியமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 177 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜவுளி மற்றும் ஜவுளி பொருள்கள் மீதான ஜிஎஸ்டி 18 %லிருந்து 5 % ஆகவும், விவசாய டிராக்டருக்கான சில பிரத்யேக பாகங்களுக்கான ஜிஎஸ்டி 28 %லிருந்து 18 % ஆகவும், சோப்புகள், சேவிங் கிட், கிரானைட், சூவிங் கம், சாக்லேட், மார்பிள், அழகு சாதனங்கள் மீதான ஜிஎஸ்டி 28 % லிருந்து 18 % ஆகவும், விளைபொருள்கள் சேமிப்புக்கான உள்கட்டமைப்பு பணிகளுக்கான வரி 12 % ஆகவும் குறைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் 58 இனங்களின் பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்கப்பட உள்ளது.

0 Responses to 177 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பு!