Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டவர்கள் சவுதிக்கு வருகை தர சுற்றுலா விசாக்களை அறிமுகப் படுத்தும் திட்டத்தில் அந்நாட்டு அரசு இருப்பதாக மூத்த சவுதி அரேபிய அதிகாரி ஒருவர் சி என் என் ஊடகத்துக்குச் செய்தி அளித்துள்ளார்.

ஏற்கனவே கடுமையான சட்டதிட்டங்கள் உள்ள நாடான சவுதியில் அந்நாட்டுப் பொருளாதாரத்தை பன்முகப் படுத்தும் நோக்கத்தின் ஒரு பகுதியாகவே இந்த முடிவு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிகழ்காலத்தில் சவுதி அரேபியாவுக்கு ஒரு வெளிநாட்டவர் செல்ல வேண்டும் எனில் அவர் அங்கு வேலை விடயமாகச் செல்பவராகவோ, வணிக ரீதியாகச் செல்பவராகவோ, அல்லது முஸ்லிம் யாத்திரீகராகவோ தான் இருக்க முடியும் என்பது நடைமுறையாகும். ஆனால் தற்போது இதில் மாற்றம் ஏற்படவுள்ளது. சவுதிக்கு சுற்றுலா விசா அறிமுகப் படுத்தப் படுவதன் மூலம் அங்கு இனிமேல் அதிகளவில் வெளிநாட்டவர்கள் விஜயம் செய்வதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில்  சவுதியின் சுற்றுலா மற்றும் இயற்கைப் பாதுகாப்பு கமிசனின் தலைவரும் இளவரசருமான சுல்தான் பின் சல்மான் பின் அப்துலாஷிஷ் புதன்கிழமை ஒரு நேர்காணலில் கருத்துத் தெரிவிக்கையில் இந்த சுற்றுலா விசாவின் இலக்காக சவுதி தேசத்தை மக்கள் முழுமையாக உணர்ந்து கொள்தலும் அதன் பெருமையை அதிகரிப்பது என்பதும் அமைந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

2018 இல் அறிமுகமாகும் இந்த சுற்றுலா விசாவை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்வதற்கும் திட்டமிடப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சவுதியின் முடிக்குரிய மன்னராகும் வரிசையில் உள்ள 32 வயதான அதன் இளவரசர் மொஹம்மட் பின் சல்மான் அண்மைக் காலமாக அங்கு பல அபிவிருத்தித் திட்டங்களையும் பெண்களுக்கான கடுமையான சட்ட திட்டங்கள் சிலவற்றைத் தளர்த்தியும் முயற்சி எடுத்து வருகின்றார். இந்நிலையில் சுற்றுலாத் துறைக்காக 2015 இல் $27.9 பில்லியன் டாலர்களில் இருந்து 2020 இல் $46.6 பில்லியன் டாலர் வரை நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு சவுதி அரசு திட்டமிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to எதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்களை வழங்கும் முடிவில் சவுதி அரேபியா!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com