சீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல அபிவிருத்தியையே எதிர்பார்க்கிறோம் என திபேத் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா இன்று வியாழக்கிழமை கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கொல்கத்தா நகரில் சேம்பர் ஆஃப் கொமெர்ஸ் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த சந்திப்பு ஒன்றில் சீனாவும் திபேத்தும் ஒரு காலத்தில் நெருங்கிய உறவைப் பேணியவை என்றும் சண்டைகள் அவ்வப்போது வாடிக்கையாக ஏற்பட்டு வந்தவை என்றும் தெரிவித்தார்.
மேலும், கடந்த காலத்தை நாம் மாற்ற முடியாது. நாம் எதிர்காலத்தை இலக்காகக் கொண்டு செயற்பட வேண்டும். திபேத்தியர்கள் சீனாவுடன் இணைந்தே இருக்க விரும்புகின்றார்கள். நாம் சுதந்திரத்தை எதிர்பார்க்கவில்லை. ஆனால் மிக அதிக வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம். மேலும் சீனாவும் எமது மக்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் மதிக்க வேண்டும். திபேத்தியர்களது கலாச்சாரமும் கல்வியும் வித்தியாசமானது. சீன மக்கள் எவ்வாறு தமது மண்ணையும் கலாச்சாரத்தையும் மதிக்கின்றார்களோ அவ்வாறே நாம் எம்முடைய கலாச்சாரத்தை மதிக்கின்றோம். ஆனால் கடந்த சில தசாப்தங்களாக என்ன நடந்தது என்பதை உண்மையாக எந்தவொரு சீனக்குடிமகனும் அறியவில்லை. கடந்த சில தசாப்தங்களாக சீனா பெரிதும் மாறியுள்ளது. உலகத்துடன் தன்னை இணைத்துக் கொண்டதன் மூலம் முன்பிருந்ததை விட 50% வீதம் சீனா மாற்றம் அடைந்துள்ளது.
இவ்வாறு கருத்துத் தெரிவித்த தலாய் லாமா திபேத்தின் புவியியல் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் தவறவில்லை. இது தொடர்பாக அவர் பேசுகையில், 'பொதுவாகப் புவியியலாளர்கள் திபேத்தினை 3 ஆவது துருவம் என்பார்கள். ஏனெனில் அந்த பீடபூமி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. சீனாவின் யங்ட்சே நதி முதல் இந்தியாவின் சிந்து நதி வரை முக்கிய பல ஜீவ நதிகள் இங்கு தான் தோன்றி கடலில் கலக்கின்றன. இதனால் பில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரம் வளம் பெறுகின்றது. எனவே திபேத்தினைப் பாதுகாப்பது என்பது அந்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல ஏனைய பில்லியன் கணக்கான மக்களுக்காகவும் தான்.' எனத் தலாய் லாமா தனது கருத்தை வலியுறுத்தினார்.

0 Responses to சீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியையே எதிர்பார்க்கிறோம்! : தலாய் லாமா