Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தேர்தல்கள் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா நேற்று வெள்ளிக்கிழமை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை சந்தித்து இந்த முறைப்பாட்டினைச் செய்துள்ளார்.

ரில்வின் சில்வா தெரிவித்துள்ளதாவது, “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேர்தல் முடிவுகளுக்கு அஞ்சியே உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கான சூட்சும முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இறுதி வழியாக தற்போது நீதிமன்ற செயற்பாடுகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்ற வழங்கும் தீர்ப்பு, சுதந்திர கட்சிக்கு சாதகமாக அமையும் பட்சத்தில் நாட்டு மக்களில் தேர்தல் உரிமைகளுக்காக வீதியிலிறங்கி போராடவும் நாங்கள் தயாராகவுள்ளோம்.

தேர்தலை காலம் தாழ்த்துவது ஜனநாயக விரோதமானது போன்று மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயற்பாடாகும். சுதந்திர கட்சியியினுள் உட்பூசல்களின் காரணமாக அக்கட்சி பிளவுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், தேர்தல் முடிவுகள் தமக்கு சாதகமாக அமையாது என்பதை அவர்கள் என்பதை அறிந்துக்கொண்டு சுதந்திரக் கட்சி இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது. எனவே இந்த சூழ்ச்சி செயற்பாடுகளை புரிந்துகொண்டு உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு ஆவணம் செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளோம்.” என்றுள்ளார்.

0 Responses to உள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்திரக் கட்சி முயற்சி; தேர்தல்கள் ஆணையாளரிடம் ஜே.வி.பி முறையீடு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com