பாராளுமன்றத்தில் விசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டு எதிரணி (மஹிந்த அணி) வலியுறுத்தியுள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற காணி அமைச்சுத் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்குள்ள மக்களின் காணி விடுவிப்பை துரிதப்படுத்த வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கைவிடுத்து வருகின்றனர். எமது ஆட்சிக்காலத்தில் கிரமமான முறையில் வடக்கின் காணிகளை விடுவித்து வந்தோம். எனினும், அவர்கள் தற்பொழுது துரிதமான காணிவிடுவிப்பை கோரி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், பாராளுமன்றத்தில் விசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கு மக்களின் காணி விடுவிப்பு குறித்து பொறிமுறையொன்றை அமைக்க அரசாங்கம் தலையிட வேண்டும்.
வடக்கின் காணிப் பிரச்சினையென்பது சர்வதேசத்துக்கு கொண்டுசெல்லப்படும் விடயமாகியிருப்பதால் இதனை விரைவில் தீர்க்கவேண்டிய தேவை இருக்கின்றது. இதேவேளை, அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் தமிழ் மக்கள் வாழும் தோட்டமொன்று முழுமையாக பாதிக்கப்பட்டது. இந்த மக்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்கி வேறிடத்தில் குடியேற்றுமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தேன். இது குறித்தும் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to விசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்: கூட்டு எதிரணி