Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு 40 வருடங்கள் ஆகின்ற இந்தச் சந்தர்ப்பத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தென்கொரிய விஜயம் இரு நாடுகளுக்கிடையேயும் பலமான உறவை ஏற்படுத்துவதற்கு அடித்தளமாக அமையும் என்று தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜெயிங் தெரிவித்துள்ளார்.

இன்று ஆரம்பமாகும் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவின் கீர்த்திமிக்க அத்தியாயம் இரு நாடுகளுக்கும் பல்வேறு நன்மைகளைக் கொண்டுவரும் என்றும் தென்கொரிய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தென் கொரியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜெயிங்கிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று புதன்கிழமை முற்பகல் இடம்பெற்றது. இந்தச்சந்திப்பின்போதே தென் கொரிய ஜனாதிபதி மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை புதிய பிரவேசத்துடன் பலப்படுத்துவது குறித்து இதன்போது இரு நாட்டுத் தலைவர்களும் விரிவாக கலந்துரையாடியதுடன், சம அனுபவங்களைக்கொண்ட இரு நாடுகள் என்ற வகையில் இவ் உறவுகளை அனைத்து துறைகளிலும் பலப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் உள்ளதென்று தென்கொரிய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஹோமாகம டெக் சிட்டி மற்றும் கட்டுநாயக்க எரோசிட்டி நிறுவனங்களை தாபிப்பதற்கான தொழில்நுட்ப உதவியை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தென் கொரிய ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டதுடன், அதற்கு தென் கொரிய ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையிலான கூட்டுறவை மேம்படுத்தும் ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

0 Responses to இலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை மைத்திரியின் விஜயம் பலப்படுத்தும்: மூன் ஜெயிங்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com