Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

செவ்வாய்க்கிழமை தனது மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணைப் பரிசோதனையை வடகொரியா பரிசோதித்து இருந்தது. இதற்குப் பதிலடியாக ஐ.நா இற்கான அமெரிக்க தூதர் இன்று வியாழக்கிழமை கருத்துத் தெரிவித்திருந்தார்.

இதன்போது அவர் யுத்தம் ஒன்று ஏற்படுமானால் நிச்சயம் அது வடகொரியாவின் அண்மையது போன்ற ஆத்திரமூட்டும் செயற்பாட்டால் தான் ஏற்படும் என்றும் அது தோன்றும் போது நிச்சயம் வடகொரியாவின் அனைத்துப் பகுதிகளும் அழிக்கப் படும் என்றும் தெரிவித்தார். மேலும் வடகொரியாவின் ஆத்திரமூட்டும் இது போன்ற செயல்களைப் பார்த்துக் கொண்டிராது அதன் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும் எனவும் நிக்கி ஹலே கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை ஐ.நா பாதுகாப்புச் சபையில் அவசரமாக ஒழுங்கு செய்யப் பட்டிருந்த கூட்டம் ஒன்றில் பேசும் போதே நிக்கி ஹலே அமெரிக்காவின் அனைத்துப் பகுதிகளையும் சென்று தாக்கக்கூடிய ஏவுகணையை வடகொரியா பரிசோதித்திருப்பதன் மூலம் யுத்தத்துக்கு வெகு அருகில் அறைகூவல் விடுத்துள்ளது என்றுள்ளார். வடகொரியாவின் இந்நடவடிக்கையின் பின் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகியவை ஐ.நா பாதுகாப்புச் சபையில் அவசரமாகக் கலந்து ஆலோசனை செய்துள்ளன.

மேலும் புதன்கிழமை சீனாவுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசும் போது வடகொரியா மீது சீனா இன்னமும் அதிக அழுத்தத்தை விதிக்க வேண்டும் என்றும் அதற்கு வழங்கும் கணிய எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததாகத் தெரிய வருகின்றது. மேலும் வடகொரியா ஒரு மரண அச்சுறுத்தலை சர்வதேசத்துக்கு வழங்கியுள்ளதாக வெள்ளை மாளிகையும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

0 Responses to யுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வடகொரியாவின் அனைத்துப் பகுதிகளும் அழிக்கப் படும்: நிக்கி ஹலே

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com