Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“நாட்டுக்கு துரோகமிழைப்பதற்காக நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவில்லை. ஆகவே, சமஷ்டி அதிகாரத்தினையோ அல்லது நாடு பிளவுபடக்கூடிய அதிகாரங்களையோ வழங்க நான் தயாராக இல்லை.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடு பிளவுபடாத அரசியல் தீர்வுடன் நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச்செல்வதுடன் சகல மக்களும் சமாதானம், ஒற்றுமை மற்றும் சகவாழ்வுடன் வாழ்வதனை உறுதிப்படுத்துவதே தனது நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென்கொரியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சியோல் நகரிலுள்ள கிரான்ட் ஹைட் ஹோட்டலின் நம் சன் மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற தென்கொரியாவில் வாழும் இலங்கையர்களுடனான சந்திப்பின்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இராணுவத்தினரையோ அல்லது தேசிய பாதுகாப்பினையோ பலவீனப்படுத்துவதற்காக தான் நாட்டை பொறுப்பேற்கவில்லை. சர்வதேசத்தினை வெற்றிகொள்வதற்கு காணப்பட்ட சவாலினையே நான் முதலாவதாக நிறைவேற்றினேன்.

உலகின் பலம்மிக்க தேசங்களின் உதாசீனத்திற்கு ஆளாகியிருந்த நம்தேசம் மீண்டும் சர்வதேசத்தின் நன்மதிப்பினை பெற்றுக்கொள்ள கடந்த மூன்று வருட காலத்திற்குள் என்னால் முடிந்துள்ளது. எவர் எதனைக் கூறினாலும் தற்போது நாட்டிற்காக நான் முழு உலகையுமே வெற்றிகொண்டுள்ளேன்.

சிறந்த வெளிநாட்டுக் கொள்கையினால் சர்வதேச யுத்தக் குற்ற விசாரணை, சர்வதேச நீதிபதிகள் பற்றிய சர்ச்சைகளை நிறைவுசெய்துள்ளதுடன், அதனை ஏற்றுக்கொள்ள விரும்பாத சிலர் தொடர்ந்தும் அது பற்றிய உரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நாட்டில் பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்கள் இடம்பெற்று வருவதுடன் சகல மக்களும் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.” என்றுள்ளார்.

0 Responses to சமஷ்டி அதிகாரத்தினை வழங்குவதற்கு நான் தயாரில்லை: மைத்திரிபால சிறிசேன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com