அ.தி.மு.க ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் இரண்டு நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தெரிவும் தள்ளிப்போயுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. வேட்பு மனுதாக்கலுக்கு இன்னும் 4 நாட்களே அவகாசம் உள்ளது.
தி.மு.க. மட்டுமே மருதுகணேசை தனது வேட்பாளராக அறிவித்துள்ளது. அ.தி.மு.க., பா.ஜ.க., டி.டி.வி.தினகரன் அணி சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்று இதுவரை தெரியவில்லை. இந்த கட்சிகள் வேட்பாளர் தேர்வில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.
அ.தி.மு.க. சார்பில் போட்டியிடப்போவது யார் என்பதில் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவு கிறது. மதுசூதனனை மீண்டும் களம் இறக்குவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் மேலும் சிலர் போட்டியிட விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
கடந்த 2 நாட்களாக ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. நேற்றுடன் விருப்ப மனு பெறுவது முடிந்ததாக கூறப்பட்டது. நேற்று மாலை வரை 28 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.
அ.தி.மு.க. அவைத் தலை வரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன், முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச்செயலாளர் தமிழ் மகன் உசேன், தென்சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர் ஆதிராஜாராம், வடசென்னை வடக்கு மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், 42-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் அஞ்சுலட்சுமி, 1996-ல் ஆர்.கே.நகரில் போட்டியிட்ட ஆர்.எம்.டி.ரவீந்திரஜெயன், 2016 தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட நூர்ஜகான் உள்பட 28 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். இதனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
முதல் முறையாக ஆர்.கே.நகர் தொகுதிக்கு தொடர்பே இல்லாத மற்ற தொகுதியை சேர்ந்தவர்களும் அ.தி.மு.க.வில் விருப்ப மனு கொடுத்து இருக்கிறார்கள். இதனால் அ.தி.மு.க. வேட்பாளர் தேர்வில் கடும் குழப்பமும் இழுபறியும் ஏற்பட்டு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
அ.தி.மு.க. சார்பில் யாரை வேட்பாளராக அறிவிப்பது என்பது குறித்து முடிவு செய்ய கட்சியின் ஆட்சி மன்றக்குழு இன்று (புதன்கிழமை) கூடி ஆலோசனை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அ.தி.மு.க. சார்பில் இன்று தஞ்சையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த தின விழா கூட்டம் நடைபெற உள்ளதால், அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாளை அல்லது நாளை மறுநாள் அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அ.தி.மு.க. வேட்பாளர் எப்போது அறிவிக்கப்படுவார் என்பது உறுதி செய்யப்படாமல் உள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியை சேர்ந்த ஒருவரையே போட்டியிட வைக்க வேண்டும் என்று பெரும்பாலான அ.தி.மு.க. நிர்வாகிகள் கூறி வருகிறார் கள். அந்த வகையில் பலரும் மதுசூதனனுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் அவருக்கு வயதாகி விட்டதாக கூறி அ.தி.மு.க.வில் ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து மதுசூதனனுக்கு மிகவும் நெருக்கமான ஆர்.எஸ்.ராஜேஷை நிறுத்த முயற்சிகள் நடக்கிறது.
இதற்கிடையே அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் அனைவரும் பெண் ஒருவரை வேட்பாளராக களம் இறக்க நினைப்பதாக தெரிகிறது. பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளதால் அவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். இந்த தகவல் வெளியானதால் கோகுலஇந்திரா, நூர்ஜஹான், அஞ்சுலட்சுமி உள்பட சில பெண்கள் விருப்ப மனு கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆர்.கே.நகரில் வெற்றி பெறுபவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் பரவியுள்ளது. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பி.எஸ்.சும் ஒன்றாக அமர்ந்து பேசி ஓரிரு நாளில் இந்த சிக்கலுக்கு தீர்வு காண்பார்கள் என்று கூறப்படுகிறது. அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப் படுபவர் டிசம்பர் 1ஆம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

0 Responses to ஆர்.கே.நகர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வை அ.தி.மு.க., இரண்டு நாட்களுக்கு தள்ளி வைத்தது!