Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முழு நாட்டினதும் அனுமதியின்றி மாகாணங்களை இணைக்கவோ, குறைக்கவோ அல்லது கூட்டவோ முடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாகாணங்களை பலவந்தமாக பாராளுமன்றத்தால் ஒன்றிணைக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் மூன்றாவது நாளாக நேற்று புதன்கிழமையும் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. அந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டில் தற்போது 9 மாகாணங்கள் உள்ளனன. முழு நாட்டினதும் இணக்கமின்றி அதை பத்தாக அதிகரிக்கவோ அல்லது எட்டாக குறைக்கவோ முடியாது. நாட்டிலுள்ள சகல மக்களும் இணங்கினால் எம்மால் அதனை பதினைந்தாகவும் சரி அல்லது மூன்றாகவும் மாற்றியமைக்க முடியும். மக்கள் இணக்கம் தெரிவித்தால் நாம் அதை செய்ய முடியும்.

மாகாணங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதையோ குறைப்பதையோ மக்களே முடிவு செய்ய முடியும். அதனை பாராளுமன்றத்தினால் பலவந்தமாக செய்ய முடியாது. வடக்கு, கிழக்கு மாகாணங்களையோ அல்லது சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களையோ ஒன்றிணைக்க எம்மால் முடியாது.” என்றுள்ளார்.

0 Responses to முழு நாட்டினதும் அனுமதியின்றி மாகாணங்களை இணைக்க முடியாது: ரணில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com