புதிய அரசியலமைப்பினை தள்ளி வைப்பதற்காக, சர்வகட்சி மாநாட்டுக்கான அழைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விடுக்கப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு அரசாங்கத்துக்கானதோ அல்லது ஒரு வருடத்துக்குரியதோ அல்ல. இது நாட்டுக்காக நிரந்தரமாக வடிவமைக்கப்படும் விடயம் என்பதால், எவரும் இங்கு கால விரயம் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "பாராளுமன்றம் தற்போது அரசியலமைப்புச் சபையாக மாற்றுப்பட்டு விவாதம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாராளுமன்றத்தில் கருத்து கூற முடியாதவர்களுக்கு வாய்ப்பளிக்கும் முகமாகவே சர்வ கட்சி மாநாடொன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இதுவரை காலமும் அனைத்து விடயங்களும் பாராளுமன்றத்துக்குள் மட்டுமே நடைபெறும் என்ற நிலை இதன்மூலம் வரலாற்றில் முதன்முறையாக மாற்றம் பெற்றுள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to புதிய அரசியலமைப்பினை தள்ளி வைப்பதற்காக சர்வகட்சி மாநாட்டுக்கான அழைப்பு விடுக்கப்படவில்லை: ராஜித சேனாரத்ன