பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த ஒரு வாரமாக தெஹ்ரிக் இ லபாயிக் யா ரசூல் அல்லா உட்பட ஏனைய சில மதக் குழுக்கள் இணைந்து, அந்நாட்டு சட்ட அமைச்சர் ஷாஹிட் ஹமீட் பதவி விலககக் கோரியும் அந்நாட்டின் தேர்தல் சட்டங்களில் ஓர் இஸ்லாமிய வாக்காளருக்கு உரிய அனைத்து சுதந்திரங்களையும் வழங்கும் விதத்தில் மாற்றியமைக்க வலியுறுத்தியும் முற்றுகைப் பேரணியை நடத்தி வருகின்றனர்.
இஸ்லாமாபாத்திலுள்ள அதிவேகப் பாதைகளை இடைமறித்து இவர்களில் ஆயிரக் கணக்கானவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் போக்குவரத்தும் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. ஆயினும் இவர்கள் அனைவரும் களைந்து செல்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி நீதிமன்றங்களில் குறித்த போராட்டக் குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில் போலிசாரைப் பயன்படுத்தி இவர்களைக் களைக்க முடியும் என்ற போதும் இப்போராட்டக் குழுக்களுடன் இரத்தம் சிந்தா விதத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பாகிஸ்தான் அரசு முனைப்பு காட்டி வருகின்றது.
தெஹ்ரிக் இ லபாயிக் யா ரசூல் அல்லா குழுவுடன் தெஹ்ரீக் இ காட்ம் இ நபுவ்வாட் மற்றும் சுன்னி தெஹ்ரீக் பாகிஸ்தான் போன்ற குழுக்களும் இணைந்து தலைநகர் இஸ்லாமாபாத்தினையும் அதன் ஒரேயொரு விமான நிலையத்தையும் இணைக்கும் அதிவேகப் பாதையையும் முர்ரீ பாதையையும் ஆயிரக் கணக்கில் இடைமறித்துள்ளதுடன் ராவல்பிண்டியின் கார்ரிசன் நகரையும் முற்றுகையிட்டுள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் அஹ்சான் இக்பால் கருத்துத் தெரிவிக்கையில் போராட்டக் காரர்களுக்கும் போலிசாருக்கும் இடையே மோதலைத் தவிர்க்கும் முகமாகவே அவர்கள் தாமாகவே களைந்து செல்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப் பட்டுள்ளதாகவும் இப்பிரச்சினையை எப்படியும் தீர்த்து விட முடியும் என்றும் இன்று ஞாயிறு நள்ளிரவுக்குள் முக்கிய முடிவுகளை எட்டி விடுவோம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இந்த காலக்கெடு தொடர்பில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்வை வழங்கும் பட்சத்தில் அரசு போராட்டக் காரர்கள் மீது இன்று ஞாயிறு நடவடிக்கை எடுக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது. சில வருடங்களுக்கு முன்பு பாகிஸ்தானில் இதே காரணத்துக்காக ஒழுங்கு செய்யப் பட்டிருந்த ஆர்ப்பாட்டப் பேரணியின் மீது போலிசார் நடவடிக்கை எடுத்ததில் சில ஆதரவாளர்கள் கொல்லப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to இஸ்லாமாபாத் போராட்டத்தை இரத்தம் சிந்தாது கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசு முனைப்பு