தமிழர்களின் உரிமைக்காக போராடி வீரச்சாவடைந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் நினைவேந்தல் வார நிகழ்வுகள், தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கிலும், தமிழர்கள் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் இன்று ஆரம்பமாகின்றன.

சுமார் 8 ஆண்டுகளின் பின்னர் இந்த ஆண்டு மாவீரர் வாரம் தாயக மண்ணில் மீண்டும் புதுப்பொலிவுடன் சுடர்விட ஆரம்பித்துள்ளது.தமிழர்களின் ஆயுதப் போராட்டம் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கா லில் மௌ னித்த பின்னர் மாவீரர் நினைவேந்தல் வாரத்தை வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் பகிரங்கமாக நினைவுகூரமுடியாத நிலமை ஏற்பட்டிருந்தது.
7 வருடங்களின் பின்னர் கடந்த வருடம் முதல் மாவீரர் நாள் நினைவேந்தல் வடக்கு, கிழக்கில் தமிழர் தாயகத்தில் பகிரங்கமாக நினைவுகூரப்பட்டது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய வடக்கிலுள்ள 5 மாவட்டங்களிலும் மற்றும் திருகோண மலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய கிழக்கிலுள்ள 3 மாவட்டங்களிலும் மாவீரர் நினைவேந்தல் வாரம் இம்முறை உணர்வெழுச்சியுடன் இன்று ஆரம்பமாகின்றது.
இதற்காக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் பொதுமக்களால் துப்புரவு செய்யப்பட்டடு வருகின்றன.அதேவேளை, வடக்கு, கிழக்கின் பொதுவான இடங்களிலும் மாவீரர் நினைவேந்தல் வார நிகழ்வுகள் இன்று பகிரங்கமாக ஆரம்பமாகவுள்ளன.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து தமிழர்களின் உரிமைக்காக தமிழீழ இலட்சியத்துக்காகப் போர்க்களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூருவதற்காக நவம்பர் மாதம் 21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதிவரை மாவீரர் நினைவேந்தல் வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசமெங்கும் இன்று ஆரம்பமாகும் மாவீரர் நினைவேந்தல் வாரம் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறும் முதன்மை நிகழ்வுடன் முடிவடையும்.

0 Responses to மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்!