Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக இரு அணிகளிடமும் விசாரணை முடிந்துள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. டி.டி.வி.தினகரன் அணியின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

அ.தி.மு.க.வின் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் தினகரன் அணி ஆகியோரிடம் மதுரை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அடுத்து தலைமை தேர்தல் ஆணையர் அக்சல்குமார் ஜோதி மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் அமர்வில் கடந்த மாதம் 6, 16, 23, 30, நவம்பர் 1, 6 மற்றும் 8-ம் தேதிகளில் ஏழு கட்டங்களாக விசாரணையை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

அதாவது சுமார் 300க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட வரைவு உத்தரவு தயார் செய்யப்பட்டு, அது ஆணையர்களுக்கு முதல் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து அவர்கள் வரைவை சரிபார்த்து சில திருத்தங்கள் மற்றும் பரிந்துரைகளை வழங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் மீண்டும் அந்த திருத்தங்களை செய்யும் பணி நடைபெற்று வந்தது.

இது முடிந்து, பின்னர் மறுபடியும் மூன்று தேர்தல் ஆணையர்களின் பார்வைக்கும் வரைவு உத்தரவானது அனுப்பி வைக்கப்பட்டு அவர்களின் முழு ஒப்புதல் கையெழுத்திற்கு பின்னர் உடனடியாக இரட்டை இலை வழக்கின் தீர்ப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன் தீர்ப்பு தற்போது வெளியாகி, எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

0 Responses to ‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக்கு; தேர்தல் ஆணையம் தீர்ப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com