ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் வாக்கு வங்கி எப்போதும் தங்களுக்கே கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்துக்கான போட்டியில், பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் அணி வெற்றி பெற்றது. இந்த நிலையிலேயே டி.டி.வி.தினகரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பா.ஜ.க.வின் சதிக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உடந்தையாக இருக்கின்றனர். கட்சியை காப்பாற்றும் கடமை எனக்கு இருக்கிறது, ஆனால் ஆட்சியாளர்களுக்கு கட்சி குறித்து கவலையில்லை.
சசிகலா தலைமையில் கட்சி இயங்கினால் தான் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியும். இடைத்தேர்தலின்போது சின்னத்தை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? முதல் சுற்றில் அவர்கள் வெற்றி பெற்றிருந்தாலும், இறுதி சுற்றில் எமக்கே வெற்றி கிடைக்கும்.
கட்சித் தொண்டர்கள் பன்னீர்செல்வம் மீதும் எடப்பாடி பழனிசாமி மீதும் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். எடப்பாடி தலைமையிலான ஆட்சியை கலைக்க பொதுமக்கள் விரும்புகின்றனர். மக்கள் விரோத எடப்பாடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவேன்: டி.டி.வி.தினகரன்