இலங்கையின் கல்வித்துறை முன்னேற்றத்துக்கான நவீன உத்திகளை கையாளும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இந்தியா ஒத்துழைப்புக்களை வழங்கத் தயாராக இருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.
உலகம் டிஜிட்டல் யுகத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், அதன் முழுப் பயனையும் வளர்முக நாடுகளும் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் இந்தியப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று வியாழக்கிழமை நண்பகல் புதுடில்லியில் இந்தியப் பிரதமரைச் சந்தித்தார். இதன்போதே மேற்கண்ட உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
இளைஞர் அபிலாஷைகளை நிறைவேற்ற விரைவாக அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென பிரதமர் மோடி அங்கு கூறினார். அவற்றை நிறைவேற்றும் போது ஏற்படும் சவால்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது பற்றியும் கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டது. இந்த அபிவிருத்தித் திட்டங்களினூடாக இலங்கையின் பொருளாதாரம் மேம்படுவதோடு தொழில் வாய்ப்புகளும் உருவாகும் என இந்தியப் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கை - இந்திய கூட்டுத் திட்டங்களுக்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தற்போதுள்ள சில பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படுமெனவும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இலங்கை - இந்திய உறவுகளை மேலும் பலப்படுத்த பிரதமர் ரணில் விக்ரசிங்க மேற்கொள்ளும் முயற்சியை பிரதமர் மோடி பாராட்டியதோடு உள்நாட்டு அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியிலும் இரு நாடுகளின் உறவைப் பலப்படுத்த பெரும் சேவையாற்றுவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
மே மாதம் இலங்கைக்கு தாம் விஜயம் செய்திருந்த வேளை இலங்கை மக்கள் தம் மீது காட்டிய அன்புக்கு விசேட நன்றியைத் தெரிவித்தார். ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தூதுக் குழுவினருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பகல் போசன விருந்தளித்து கௌரவித்தார்.
இதேவேளை, புதுடில்லியில் ஆரம்பமான சைபர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, “இன்றைய காலகட்டத்தில் தகவல் மற்றும் கல்வி அறிவை பெற்றுக்கொள்வதற்கான முக்கிய அரங்கமாக சைபர் தொழிநுட்பம் வாய்ப்பாக அமைந்துள்ளது. வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கும் மனிதவள அபிவிருத்தி, சமூக முன்னேற்றச் செயற்பாடுகள் என்பன இதில் பிரதான அங்கமாக அமைகின்றது. இதன் காரணமாக மக்கள் சமூகம் புதிய சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படலாம். மக்களது சுதந்திரம், உரிமை, தனிப்பட்ட சுதந்திரம் என்பன இந்த சவால்களாக அமையலாம். எனவே முதலாவதாக எம்மிடையே சைபர் ஒழுக்க விதிக்கோவை ஒன்று தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தேவை எமக்கு இருக்கின்றது.
சுதந்திரமாக தகவல்கள் குவியும் ஒரு சூழ்நிலையில் தனிப்பட்ட சுதந்திரங்களையும் உள்வாங்கி சமாந்திரமாக கையாளும் ஒரு போக்கு எமக்கு முக்கியமானதொன்றாகும். இந்த சைபர் தொழிநுட்பம் இன்று உலகின் 135 நாடுகளில் கவனம் செலுத்தப்பட்டுவரும் ஒரு உத்தியாகும். இதிலிருந்து நாம் விலகி நிற்க முடியாது” எனப் பிரதமர் தெரிவித்தார்.

0 Responses to இலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒத்துழைப்பினை இந்தியா வழங்கும்; ரணிலிடம் மோடி தெரிவிப்பு!