Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நேற்று புதன்கிழமை பொஸ்னியாவின் முன்னால் இராணுவத் தளபதியான ஸ்லோபோதன் ப்ரால்ஜக் என்பவர் மீது நெதர்லாந்திலுள்ள சர்வதேச நீதிமன்றம் போர்க் குற்றம் சுமத்தி தீர்ப்பு வெளியிட்டது.

இத்தீர்ப்பை அடுத்து யாரும் எதிர்பாராத விதத்தில் உடனே அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். 1992 முதல் 1995 ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் பொஸ்னிய உள்நாட்டுப் போரில் இலட்சக் கணக்கான மக்கள் கொல்லப் பட்டமைக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப் பட்டு ப்ரால்ஜக் உட்பட 6 பேருக்கு போர்க் குற்றவாளிகள் என்ற தீர்ப்பை நேற்று சர்வதேச நீதிமன்றம் வழங்கி இருந்தது.

இதை அடுத்துத் தான் குற்றவாளி அல்ல என்று கூறிக் கொண்டே விஷத்தை அருந்திய ப்ரால்ஜக் நீதிமன்றத்தில் மயங்கி விழுந்ததை அடுத்து சபை ஒத்தி வைக்கப் பட்டது. மேலும் போலிசார் அவரை உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதும் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிர் துறந்துள்ளார். ஆயினும் இவர் தற்கொலை செய்து கொள்ளப் போகும் விடயம் 3 மனித்தியாலங்களுக்கு முன்பே அவரின் வழக்கறிஞருக்குத் தெரியும் என்று தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.

இதைவிட இன்னொரு பாரிய சர்ச்சையும் எழுந்துள்ளது. அதாவது மயங்கி விழுந்த ப்ரால்ஜக் வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப் பட்ட பின் அவரது சிகிச்சைக்கு முன்னுரிமை கொடுத்த காரணத்தினால் புறக்கணிக்கப் பட்ட ஏனைய 6 அவசர சிகிச்சை நோயாளிகள் பரிதாபமாக உயிரிழக்க நேரிட்டது என்று தெரிய வந்துள்ளது.

0 Responses to சர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செய்த பொஸ்னிய முன்னால் இராணுவத் தளபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com