Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிம்பாப்வேயில் வன்முறையற்ற முறையில் அந்நாட்டு இராணுவம் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதுடன் கடந்த 37 வருடங்களாகத் தன்னிகரற்ற தலைவராக விளங்கிய 93 வயதாகும் ராபர்ட் முகாபே இனையும் அவரது துணைவியாரையும் வீட்டுக் காவலில் வைத்துள்ளது. மேலும் அந்நாட்டு அதிபர் முகாபே பாதுகாப்பாக இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் கிட்டத்தட்ட கடந்த 3 தசாப்தங்களாக தொடர்ந்து ஆட்சி செலுத்தி வந்த முகாபே இனது ஆளும் கட்சி மீதும் அவரது உறவினர்களால் பெரும்பாலும் கட்டுப்படுத்தப் பட்டு வந்த அரசாட்சி மீதும் சமீப காலமாக புகார்கள் எழுப்பப் பட்டு வந்த போதும் அவை முகாபேயின் சக்தி வாய்ந்த அதிகாரத்தால் புறக்கணிக்கப் பட்டன. அண்மையில் அதிபர் முகாபேக்கு எதிராக நடந்ததாகக் குற்றம் சுமத்தப் பட்டு துணை அதிபர் எம்மர்சன் பதவி நீக்கம் செய்யப் பட்டும் இருந்தார். இதனால் சிம்பாப்வே இல் அதிபர் முகாபே இனது ஆட்சி மீது பொது மக்கள் மற்றும் அரச இயந்திரத்தின் அதிகாரிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. இதன் உச்சக் கட்டமாகவே இன்று புதன்கிழமை அதிகாலை அந்நாட்டு இராணுவம் தலைநகர் ஹராரேவை சுற்றி வளைத்து அரச அலுவலகங்களை முற்றுகையிட்டது.  மேலும் சிம்பாப்வேயின் அரச ஊடகத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் இராணுவம் கொண்டு வந்ததை அடுத்து ஆட்சிக் கவிழ்ப்பை அந்நாட்டின் முப்படைத் தளபதி மோயா தொலைக்காட்சியில் உரையாற்றியதன் மூலம் உறுதிப் படுத்தினார்.

மோயா தனது உரையில் அரசை இராணுவம் தன் வசம் எடுக்கும் எண்ணம் இல்லை எனவும் அதிபர் முகாபே மற்றும் அவரைச் சுற்றியுள்ள ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் அரசில் முறைகேடுகளைக் களையவுமே இந்த அதிரடி நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார். எனினும் சிம்பாப்வே இல் அதிபர் முகாபே ஆதரவு பொது மக்களினால் வன்முறைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சர்வதேச நாடுகள் அங்குள்ள தமது தூதரக அதிகாரிகளை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளன.  52 வயதாகும் முகாபே மனைவி கிரேஸ் அவருக்குப் பின் அதிபராக வாய்ப்புக்கள் பிரகாசமாக இருந்த நிலையில் தான் அங்கு இராணுவப் புரட்சி நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்சிக் கவிழ்ப்பை அடுத்து சிம்பாப்வே இல் வன்முறைகள் ஏதும் பாரியளவில் இடம்பெற்றதாகத் தகவல் இல்லை. மாறாக தலைநகர் ஹராரே உட்பட அனைத்து முக்கிய நகரங்களும் வழமை போலவே இயங்கியதாகவும் கடைகள் திறக்கப் பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த ஆட்சிக் கவிழ்ப்பை முன்னிட்டு சிம்பாப்வே இல் இயங்கும் அமெரிக்க பிரிட்டன் தூதரகங்கள் நேற்று மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.கட்டமைப்பு அடிப்படையில் ஆபத்தானது என்றும் அங்கு விமரிசனங்கள் எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to சிம்பாப்வேயில் ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவம்! : வீட்டுக் காவலில் அதிபர் முகாபே

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com