இதுவரை காலம் யோகாவை ஏற்றுக் கொள்ளாமல் ஒதுக்கி வந்த சவுதி அரேபியா தற்போது அதனை விளையாட்டின் ஒரு பகுதியாக அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை உறுதி செய்த சவுதியின் வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சு அதிகாரிகள் இது தொடர்பில் சவுதி அரசிடம் இருந்து உரிமம் பெறப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
2015 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கடும் முயற்சியின் விளைவாக ஜூன் 21 ஆம் திகதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா பிரகடனப் படுத்தியது. இதையடுத்து பல நாடுகள் தமது தேசத்தில் யோகாவைப் பயிற்சி செய்ய சட்ட அனுமதி அளித்திருந்தன. இதைத் தொடர்ந்து இந்திய யோகா அமைப்புக்கள் சவுதியிலுள்ள பல இந்தியப் பள்ளிகளில் பருவ வயதினருக்கு யோகாப் பயிற்சி அளிக்கத் தொடங்கியது. மேலும் நௌஃப் அல் மர்வாயி என்ற சவுதி பெண் முதன் முறையாக அங்கு யோகாப் பயிற்சி அளிக்கத் தகுதி பெற்ற ஆசிரியராக அடையாளம் காணப் பட்டார்.
இந்நிலையில் சவுதியில் யோகாவுக்கு அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதை வரவேற்ற இந்திய யோகா குரு பாபா ராம்தேவ் அந்நாட்டு அரசுக்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஞ்ஞான ரீதியிலான ஒரு முடிவு என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

0 Responses to விளையாட்டின் ஒரு பகுதியாக யோகாவை அங்கீகரித்தது சவுதியின் வர்த்த தொழிற்துறை அமைச்சு