வருமான வரி சோதனைக்கும் அரசியல் மாற்றத்திற்கும் முடிச்சு போடுவது தேவையற்றது என்று பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சசிகலா உறவினர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் என ஏறக்குறைய 180 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் நேற்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 1800க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழகத்திலும் பிற பகுதிகளிலும் ஒரே நாளில் இவ்வளவு அதிகமாக இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வருமான வரித்துறை சோதனைக்கு மத்திய அரசு மீது அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார். மேலும், தமிழகத்தில் சில அரசியல் தலைவர்களும் மத்திய அரசு மீது விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்த நிலையில், வருமான வரி சோதனைக்கும் அரசியல் மாற்றத்திற்கும் முடிச்சு போடுவது தேவையற்றது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழிசை கூறுகையில், “ யார் மீது சந்தேகம் உள்ளதோ அவர்கள் மீது தான் வருமானவரித்துறை நடவடிக்கை எடுக்கிறது. வருமான வரித்துறை சோதனைக்கும் அரசியல் மாற்றத்திற்கும் முடிச்சு போடுவது தேவையற்றது. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் வருமான வரி சோதனைக்கு உட்படும் போது, வரவேற்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

0 Responses to வருமான வரிச் சோதனைக்கும் அரசியல் மாற்றத்திற்கும் முடிச்சு போடுவது தேவையற்றது: தமிழிசை சவுந்தரராஜன்