ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக, அந்தக் கட்சி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிக்கின்றது என்று மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தேர்தலைப் பிற்போடுமாறு கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ள ஆறு பேரில், ஐவர் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம் தேர்தலைப் பிற்போடுவது தொடர்பான சுதந்திரக் கட்சியின் அரசியல் நோக்கம் தெளிவாகின்றது.
நீதிமன்றம் சென்ற அனைத்துக் கட்சிகளும் தேர்தலை பிற்போடக் கூடாது எனக் கூற, சுதந்திரக் கட்சி மட்டும் அவ்வாறு செய்யாதிருப்பதன் மூலம், தேர்தலை நடத்துவதில் அக்கட்சிக்குள்ள விருப்பமின்மை உறுதியாகின்றது.
இதேவேளை, தொடர்ந்தும் அக்கட்சி தேர்தலை நடத்த விரும்பவில்லையாயின், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தத் தேவையான அனைத்து முயற்சிகளையும், மக்கள் விடுதலை முன்னணி முன்னெடுக்கும்.” என்றுள்ளார்.

0 Responses to உள்ளூராட்சித் தேர்தலை பிற்போடும் முனைப்பில் சுதந்திரக் கட்சி செயற்படுகிறது: ரில்வின் சில்வா