Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

‘எனது குடும்பத்தினர்கள் அனைவரும் சிவ பக்தர்கள்.” என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தின் அமரேலியில் உள்ள சோம்நாத் கோவிலுக்கு சென்ற ராகுல் காந்தி, இந்துக்கள் அல்லாதோர் பட்டியலில் கையெழுத்திட்டு சென்றதாக சர்ச்சை எழுந்தது. ஆனால், பா.ஜ.க.வின் இந்த கூற்றை நிராகரித்த காங்கிரஸ், இது பா.ஜ.வின் வேலை என குற்றம் சாட்டியது.

இந்த நிலையில், இந்து அல்லாதோர் பட்டியலில் கையெழுத்திட்டதாக எழுப்பப்பட்ட சர்ச்சைக்கு ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

ராகுல் காந்தி கூறுகையில், “சோம்நாத் கோவிலில் இந்துக்கள் அல்லாதோர் பதிவு செய்யும் பதிவேட்டில் பா.ஜக.வினர் சாதுர்யமாக எனது பெயரை திணித்துவிட்டனர். ஆளும் பா.ஜ.க., அரசியல் இலாபம் பெற மதத்தை பயன்படுத்துகிறது. எனது பாட்டி (இந்திரா காந்தி) மற்றும் எனது குடும்பத்தினர் அனைவரும் சிவ பக்தர்கள்.

ஆனால், இது போன்ற விஷயங்களை நாங்கள் தனிப்பட்டதாக வைத்துக்கொண்டோம். ஏனெனில், இது மிகவும் தனிப்பட்ட விஷயம் என்று நாங்கள் கருதினோம். எனவே, இந்த விவகாரத்தில் யாருடைய சான்றிதழும் எங்களுக்கு தேவையில்லை. இந்த விவகாரத்தை வணிகப்படுத்தவோ, அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தவோ நாங்கள் விரும்பவில்லை.” என்றுள்ளார்.

0 Responses to எனது குடும்பத்தினர் அனைவரும் சிவ பக்தர்கள்; சமய சர்ச்சைக்கு ராகுல் காந்தி பதில்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com