Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், ஏழைகள் வாழ்வு உயரவும், கருப்பு பணத்தை ஒழிக்கவும் அரசியல் ரீதியாக எந்த விலையையும் கொடுக்க நான் தயார்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இந்துஸ்தான் டைம்ஸ் தலைவர்கள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசியதாவது: “ரூபாய் நோட்டு தடை செய்யப்படுவதற்கு முன் கருப்பு பணம் அதிகளவில் புழங்கி, நாட்டின் பொருளாதாரத்தில் சமநிலையில் இருந்தது. இப்போது ஒழுங்குபடுத்தப்பட்டு விட்டது. மேலும், ஊழல் செய்தவர்கள் யார் என்பதை கண்டறியவும் ரூபாய் நோட்டு தடை உதவியுள்ளது. இதனால், மக்களின் நடத்தையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுதந்திரம் பெற்ற பிறகு முதன்முறையாக ஊழல் செய்தவர்கள், முறைகேடாக பணம் சம்பாதிக்க பயப்படத் தொடங்கி உள்ளனர். ஊழல் இல்லாத முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்ட அரசை நடத்துவதில் எனது அரசாங்கம் உறுதியாக உள்ளது. இங்கு ஊழலுக்கு இடமில்லை. இந்த முடிவுகளை எடுப்பதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.

மக்களுக்கான சேவையை மேற்கொள்வதில் ஆதார் மிகுந்த பயன் அளிக்கிறது. மக்கள் நலத்திட்டங்கள் அவர்களை சென்றடைந்துள்ளதா என்பதை அறியவும் ஆதார் உதவுகிறது. மேலும், பினாமி சொத்துக்களை கண்டுபிடிக்கவும், சுத்தப்படுத்தவும் இப்போது ஆதார் பயன்படுகிறது. ஊழலுக்கு எதிராக, ஏழைகள் மற்றும் இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், கருப்பு பணத்தை ஒழிக்கவும் நான் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு அரசியல் ரீதியாக மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியது வரும் என்பதை நான் அறிவேன். நான் தேர்ந்தெடுத்த பாதையில் நாட்டை முன்னேற்றிச் செல்ல விரும்புகிறேன். அதற்கு எந்த விலையையும் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஊழல்தான் அவர்களின் நெறிமுறை கொள்கையாக இருந்தது. எந்தவித மந்திரத்தாலும் இந்த நாட்டை மாற்ற முடியாது என்பதை அப்போது நான் புரிந்து கொண்டேன். அதற்காக ஒன்றும் செய்யாமல் என்னால் இருக்க முடியாது. அப்படி எதுவும் செய்யாமல் இருந்தால் என்னை தேர்வு செய்த மக்களுக்கு துரோகம் செய்த உணர்வு ஏற்படும். எனவேதான், நாட்டை முன்னேற்ற பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனது முயற்சியால் இந்தியா மிகப்பெரிய மாற்றம் பெற்று உலகளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது.

கடந்த 70 வருடமாக நடந்த மோசமான ஒரு அமைப்பைதான் மக்கள் எதிர்த்து போராடி வந்தனர். இந்த அமைப்புதான் நாட்டின் முன்னேற்றத்திற்கு, வளர்ச்சிக்கு தடையாக இருந்தது. என்னுடைய அர்ப்பணிப்பு பணிகளாலும், முயற்சியாலும் தான் இந்த அமைப்பு முடிவுக்கு வரும் என்று மக்கள் நம்பினார்கள். இதனால் தான் நடுத்தர குடும்பத்தின் வாக்குகள் எனக்கு கிடைத்திருக்கின்றன.” என்றுள்ளார்.

0 Responses to இந்தியாவின் முன்னேற்றத்திற்காக எந்த விலையும் கொடுக்கத் தயார்: மோடி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com