Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதைப் பின்னணியாகக் கொண்ட பிரெக்ஸிட் விவகாரத்தில் பிரிட்டன் நாடாளுமன்ற அனுமதியின்றி முடிவு எடுக்க முடியாத நிலைக்கு பிரிட்டன் பிரதமர் தெரேசா மே தள்ளப் பட்டுள்ளார்.

அதாவது பிரிட்டன் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை டொம்னிக் கிறிவ் என்ற உறுப்பினரால் தாக்கல் செய்யப் பட்ட இது தொடர்பிலான மனுவில் வாக்கெடுப்பு நடத்தப் பட்டது. அதில் பிரதமர் தெரேசாவுக்கு சார்பாக 304 வாக்குகளும் எதிராக 305 வாக்குகளும் கிடைத்ததில் 5 வாக்கு வித்தியாசத்தில் இந்த நெருக்கடி தெரேசா மே இற்கு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே பிரிட்டனில் மே இன் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த 12 எம்பிக்கள் பிரதமர் தெரேசா மே இன் பிரெக்ஸிட் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. பிரிட்டன் நாடாளுமன்றம் பிரெக்ஸிட் விவகாரத்தில் செல்வாக்கு செலுத்தக் கூடிய நிலமை ஏற்பட்டதை அடுத்து இதை 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியன் வரவேற்றுள்ளது. மேலும் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதா மற்றும் வருங்காலத்தில் ஐரோப்பிய யூனியனுடனான பிரிட்டனின் உறவு எப்படி இருக்கும் என்பது தொடர்பில் இன்னும் கடின உழைப்பு வேண்டியுள்ளது என்றும் ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.

2019 மார்ச் 29 ஆம் திகதி ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் உத்தியோகபூர்வமாக வெளியேற இருப்பதாக ஏற்கனவே தீர்மானித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to பிரெக்ஸிட் வாக்கெடுப்பில் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே இற்கு நெருக்கடி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com