Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தெற்கு பிரான்ஸில் மில்லாஸ் என்ற கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை ரயில் கடவையில் ரயிலுடன் பள்ளிப் பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

இதில் 6 மாணவர்கள் பலியானதுடன் 14 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர். இந்த விபத்தில் பேருந்து இரண்டு துண்டுகளாகப் பிளவு பட்டதுடன் ரயிலும் தண்டவாளத்தில் இருந்து விலகியுள்ளது. கடந்த 3 தசாப்தங்களில் பிரான்ஸில் ஏற்பட்ட மோசமான பேருந்து விபத்தாக இது பதிவாகியுள்ளது. இந்த விபத்து தொழிநுட்பக் கோளாறால் விளைந்த சமிக்ஞைத் தவறால் ஏற்பட்டதா? அல்லது மனிதத் தவறா என்ற கோணங்களில் விசாரணை தொடங்கப் பட்டுள்ளது. இதற்காக விபத்துப் பகுதி முத்திரை இடப்பட்டு மூடப்பட்டுள்ளது.

இந்த விபத்தை அடுத்து பாதிக்கப் பட்ட மாணவர்களது பெற்றோர் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். மேலும் பிரெஞ்சு பிரதமர் எடௌர்ட் பிலிப்பே சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். மேலும் இந்த கோர விபத்தை நேரில் பார்த்துக் கதிகலங்கியுள்ள மாணவர்களுக்கு உளவியல் அறிவுரைகள் வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

பிரான்ஸில் இதற்கு முன்பு 2015 இல் அதிவேக ரயில் ஒன்று விபத்தில் சிக்கியதில் 11 பேர் கொல்லப் பட்டும் 2013 இல் தெற்கு பிரான்ஸில் ஏற்பட்ட சரக்கு ரயில் விபத்தில் 7 பேர் கொல்லப் பட்டும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to பிரான்ஸில் ரயிலுடன் பள்ளிப் பேருந்து மோதி விபத்து: 6 மாணவர்கள் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com