Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“நம் நாட்டில் நீதி அனைவருக்கும் சமமாக இல்லாத நிலையில், நாம் கனவு காணும் இந்தியாவை உருவாக்க முடியாது.” என்று பா.ஜ.க. மக்களவை உறுப்பினர் வருண் காந்தி தெரிவித்துள்ளார். சஞ்சய் காந்தியின் மகன் வருண் காந்தி உ.பி.,மாநிலம் சுல்தான்பூரில் பா.ஜ.க, கட்சியின் மக்களவை உறுப்பினரான இருக்கின்றார்.

அவர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில்: ‛‛இன்று நான் இங்கு இருக்கிறேன், இப்பொழுது நான் பேசுவதை நீங்கள் கேட்டுகொண்டிருக்கிறீர்கள் என்றால் அதற்கு என் ‛காந்தி' என்ற அடைமொழி தான் முக்கிய காரணமாக இருக்க முடியும். அதனால் தான் இந்த சிறிய வயதில் இரண்டு முறை மக்களவை உறுப்பினரான தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளேன்.

பின்னணி இல்லாத குடும்பங்களில் இருந்து திறமையிருந்தும், தலைமை பண்பு இருந்தும் இளைஞர்கள் அரசியல் ஜொலிப்பது கடினம் தான். நம் நாட்டில் ரூ 25,000 பணத்தை திரும்ப கட்டடாததால் இது வரை 14 லட்சம் ஏழை மக்கள், விவசாயிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதே நாட்டில் தான் பல கோடி கடனை ஏமாற்றியவர்கள் சுதந்திரமாக சுற்றுகிறார்கள்.

நீதி என்பது சமமாக இல்லாத நம் நாட்டில் நாம் கனவு காணும் இந்தியாவை உருவாக்க முடியாது. இந்தியாவின் 60 சதவீத பொருளாதாரம் நாட்டில் உள்ள ஒரு சதவீத மக்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. ‛‛ என கூறினார்.

0 Responses to நாம் கனவு காணும் இந்தியாவை உருவாக்க முடியாது: வருண் காந்தி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com