Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் 2018 ஆம் வருடம் மார்ச் 18 ஆம் திகதி ரஷ்யாவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை ரஷ்ய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் வலெண்டினா மேட்வெய்ன்கோ விடுத்துள்ளார்.

கடந்த 2012 ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புட்டினின் பதவிக்காலம் அடுத்த வருடம் நிறைவடையவுள்ள நிலையில் புதிய அதிபர் தேர்தலில் அவர் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் 2018 மார்ச்சில் அதிபர் தேர்தல் நடத்துவதற்கான வாக்கெடுப்பு ரஷ்ய பாராளுமன்ற மேல் சபையில் நடத்தப் பட்டது. இதன்போது இம்முடிவுக்கு ஆதரவாக ஏகமனதாக செனட்சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதன் அடிப்படையில் மார்ச் 18 இல் நடைபெறவுள்ள முதற்கட்ட தேர்தலில் புட்டினை எதிர்த்து கம்யூனிசக் கட்சி சார்பாக ஜென்னடி சுய்கனோவ் போட்டியிடுகின்றார்.

ஆயினும் கடந்த அதிபர் தேர்தலின் பின் நடத்தப்பட்டு வந்த கருத்துக் கணிப்புக்கள் அனைத்திலும் 2 ஆவது முறையும் அதிபர் பதவிக்குப் போட்டியிடும் புட்டின் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது இக்கருத்துக் கணிப்புக்கள் அனைத்திலும் புட்டின் 40% வீதத்துக்கும் அதிகமாக வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to அடுத்த வருடம் மார்ச் 18 ஆம் திகதி ரஷ்ய அதிபர் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com