எதிர்வரும் 2021ஆம் ஆண்டு வரையில் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
2021ஆம் ஆண்டு வரையில் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு அரசியலரைப்பில் ஏதாவது வாய்ப்புக்கள் இருக்கின்றதா என்று மைத்திரிபால சிறிசேன உயர்நீதிமன்றத்திடம் ஆலோசனை கோரியுள்ளார். இந்த விடயத்தினை எதிர்வரும் வியாழக்கிழமை (11ஆம் திகதி) உயர்நீதிமன்றம் கவனத்தில் எடுத்து ஆராயவுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பிலான 19வது திருத்தச் சட்டம், ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதன் பின்னரே, நடைமுறைக்கு வந்ததன் காரணத்தினால், மைத்திரிபால சிறிசேனவின் ஜனாதிபதி பதவி அதற்கு முன்னரான அரசியலமைப்பின் பிரகாரத்தின் அடிப்படையிலானதா? என்கிற விடயத்தை ஆராயும் நோக்கிலேயே உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
19வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி பதவிக்காலம் என்பது 5 ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 19வது திருத்தம் அமுலுக்கு வருவதற்கு முன்னர் நிறைவேற்று ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும்.
மைத்திரிபால சிறிசேன, 2015ஆம் ஆண்டு ஜனவரி 09ஆம் திகதி பதவியேற்றிருந்தார். அவர் ஜனாதிபதியாக பதவியேற்று இன்றோடு மூன்று ஆண்டுகளாகிறது.

0 Responses to 2021 வரை ஜனாதிபதியாக பதவி வகிக்க மைத்திரி முயற்சி(?)