Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொழும்பில் பாதாள உலகக் குழுக்களின் அச்சுறுத்தல் இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கொழும்பு வடக்குப் பகுதியில் பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் தேசிய கலந்துரையாடல் அமைச்சருமான மனோ கணேசன் குற்றஞ்சாட்டியிருந்தார்.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அனைத்து ஊடகவியலாளர்களும் கொழும்பு வடக்குக்கு விஜயம் மேற்கொண்டு, அமைச்சர் மனோ கணேசனால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துகளை ஆராய்ந்து பார்க்க வேண்டுமென நான் வேண்டுகோள் விடுக்கிறேன். நாங்கள் சுதந்திரமாக நடந்து திரிகிறோம், ஆனால் அமைச்சர், விசேட பாதுகாப்புடன் நடந்து திரிகிறார். மனோ கணேசன் இனவாதத்தை உருவாக்கி, மதங்களை விற்கக்கூடாது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்காக, அவ்வாறான பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்தவர்களை நாம் தெரிவு செய்திருந்தால், அவர்களைப் பெயரிடுமாறு, அமைச்சர் மனோ கணேசனைக் கோரியிருந்தோம். தூய்மையான முறையில் அரசியல் செய்பவர்கள் நாங்கள். தேர்தல்களில் வாக்குகளைப் பெற முடியாதவர்கள், அவ்வாறான கருத்துகளைக் கூறுகின்றனர். முன்னைய தேர்தல்களிலும், ஐ.தே.கவுக்கு எதிரான அவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர்.

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்தவர்களைப் போலச் செயற்படுபவர்கள் தான், பாதாள உலகக் குழுக்களைப் பற்றி அதிகமாகக் கதைக்கிறார்கள். கொழும்பு வடக்கில் பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த எவரும் இல்லை. அவர்கள் அனைவரும் என்னால் ஏற்கனவே நீக்கப்பட்டு விட்டனர்.” என்றுள்ளார்.

0 Responses to மனோ கணேசன் கூறுவது பொய்; கொழும்பில் பாதாள உலகக் குழுக்கள் இல்லை: ரவி கருணாநாயக்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com