பிறமொழி மோகத்தில் சிலர் தமிழ் மொழியைத் தவிர்ப்பது வேதனை அளிக்கிறது என்று திருவள்ளுவர் திருநாள் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் திருவள்ளுவர் திருநாள் விழா மற்றும் தமிழுக்கு தொண்டாற்றிய அறிஞர்கள் 7 பேருக்கும், சமுதாய தொண்டாற்றிய 2 பேருக்கும் விருது வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடந்தது.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விழாவுக்கு தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழாவில் கலந்து கொண்டு முனைவர் கோ.பெரியண்ணனுக்கு திருவள்ளுவர் விருதையும், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு தந்தை பெரியார் விருதையும், டாக்டர் ஜார்ஜுக்கு அண்ணல் அம்பேத்கர் விருதையும், சுப்பிரமணியனுக்கு அண்ணா விருதையும், தினகரனுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருதையும், முனைவர் பாலசுப்பிரமணியனுக்கு மகாகவி பாரதியார் விருதையும், ஜீவபாரதிக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருதையும், எழுத்தாளர் பாலகுமாரனுக்கு தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருதையும், முனைவர் மருதநாயகத்துக்கு முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன் விருதையும் வழங்கி பேசினார்.
தனதுரையில் முதலமைச்சர் தெரிவித்துள்ளதாவது, “இன்றைக்கு சுமார் 40 நாடுகளில் தமிழர்கள் பரவி வாழ்கிறார்கள், அந்தந்த நாடுகளில் தமிழ்ச் சங்கங்கள் இருக்கின்றன. வெளிநாட்டினரும் தமிழ் அறியா பிற மாநிலத்தவர் மற்றும் பிற நாட்டினர் தமிழ் பேசுகிறார்கள், தமிழ் எழுதுகிறார்கள். தமிழ் நாட்டிலேயே பிறந்து, தமிழ் நாட்டிலேயே வாழும் சிலர் பிற மொழி மோகத்தில் தமிழை தவிர்ப்பது, வேதனை அளிக்கிறது. சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் தமிழ்மொழி தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது.” என்றுள்ளார்.

0 Responses to பிறமொழி மோகத்தில் தமிழைத் தவிர்ப்பது வேதனையளிக்கிறது: எடப்பாடி பழனிசாமி