பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் பிராந்திய முக்கியத்துவம் மிக்க கபஹார் துறைமுகத்துக்கு அருகே ஜிவானியில் இராணுவத் தளம் அமைக்க சீனா முற்படுகின்றது என்ற அமெரிக்காவின் கணிப்புக்கள் பொய் எனவும் அவ்வாறான திட்டம் எதுவும் இல்லை எனவும் சீனா தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கபஹார் துறைமுகம் இந்தியா, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியால் கட்டப் பட்டு வரும் நிலையில் சீன அரசால் மாத்திரம் நிர்மாணிக்கப் பட்டு வரும் க்வாடர் துறைமுகம் கூட ஜிவானிக்கு அண்மையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிராந்திய முக்கியத்துவம் மிக்க கடல் மார்க்கங்களின் பயன்பாட்டுக்காக பாகிஸ்தானில் தனது 2 ஆவது வெளிநாட்டு இராணுவத் தளத்தை நிர்மாணிக்க சீனா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியான செய்தியை மேற்கோள் காட்டி குளோபல் டைம்ஸ் பத்திரிகையும் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தி குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சின் பேச்சாளர் லூ காங்க் மீது கேள்வி எழுப்பப் பட்ட போது அவர் இத்தகவல் அந்தளவுக்குக் கவனம் செலுத்தக் கூடியது ஒன்றல்ல என்று தெரிவித்துள்ளார். தற்போது பொருளாதார அபிவிருத்தி மற்றும் வணிக நோக்கங்களுக்காக சீனா பாகிஸ்தானுடன் கை கோர்த்து CPEC என்ற $ 50 பில்லியன் டாலர் பெறுமதியான செயற்திட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

0 Responses to பாகிஸ்தானில் இராணுவத் தளம் அமைக்கத் திட்டம் எதுவும் தீட்டவில்லை : சீனா அறிவிப்பு